விழுப்புரத்தில் பயங்கரம்.... பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீச்சு ; தீயில் கருகிய செல்போன் கடை

செல்போன் சர்வீஸ் செய்ததற்கு பணம் தர முடியாது என மறுத்து வாக்குவாதம் செய்து பெட்ரோல் குண்டை கடை உள்ளே வீசியுள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப்பகலில் செல்போன் சர்வீஸ் கடையில் சர்வீஸ் செய்த செல்போனுக்கு 200 ரூபாய் கொடுக்க மறுத்து இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்தில் ஜாகீர் உசேன் என்பவருக்கு சொந்தமான பானு மொபைல் சர்வீஸ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மொபைல் சர்வீஸ் செண்டருக்கு அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் அருண் என்பவர் செல்போன் சர்வீஸ் செய்ய அடிக்கடி வந்து சென்றிருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று செல்போன் சர்வீஸ் செண்டருக்கு சர்வீஸ் கொடுத்த செல்போனை அருண் வாங்க வந்தபோது  ஜாகீர் உசேன் சர்வீஸ் செய்ததற்காக 200 ரூபாய் கேட்டுள்ளார். பணத்தை பிறகு தருகிறேன், செல்போனை இப்போது கொடு என அருண் கூறியுள்ளார். ஏற்கனவே 300 ரூபாய் பேலன்ஸ் இருப்பதால் இந்த பணத்தை கொடுத்தால் தான் செல்போனை கொடுப்பேன் என ஜாகீர் கறாராக கூறி இருக்கிறார்.

அப்போது செல்போன் சர்வீஸ் செய்ததற்கு பணம் தர முடியாது என மறுத்து வாக்குவாதம் செய்த அருண் கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோல் குண்டினை கடை உள்ளே வீசியுள்ளார். இதில் கடையில் இருந்த சர்வீஸ் செல்போன்கள், செல்போன் உதிரி பாகங்கள் சேதமடைந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கடை முழுவதுமாக புகை மண்டலமாக காட்சியளித்ததால் செல்போன் கடை அருகே இருந்தவர்கள் கடைக்கு வந்தபோது பெட்ரோல் குண்டு வீசிய நபர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

இதில் கடையில் இருந்த செல்போன் சர்வீஸ் கடையின் சகோதரர் ஷேக் அலாவுதீன் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தார். இச்சம்பம் குறித்து நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரனை செய்து வருகின்றனர். செல்போன் சர்வீஸ் கடையில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola