பெட்ரோல் குண்டு பதுக்கிய வழக்கில் கைதான 3 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்... பெங்களுருவில் இருந்து பாதுகாப்புடன் ஆஜர்படுத்திய போலீசார்.

Continues below advertisement

கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்ட 3 பேர் கோவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

2013 விஸ்வரூபம் போராட்ட வழக்கு விஸ்வரூபம் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான போது கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது குனியமுத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டுகளை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிச்சன் புகாரி, சுலைமான், வளையல் ஹக்கீம் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களுரு சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கிச்சன் புகாரி உட்பட 3 பேரும் பெங்களூரு சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மினோ விசாரணையை மார்ச் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.