மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட ஆனையூர் அருகே  மலர்நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் யார் ஆளும் கட்சியில் இருந்தாளும் அவர்கள் எனக்கு நெருக்கம் தான் எனக் கூறி பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபடுவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் விரிக்கும் மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். இந்த சூழலில் இவர் தன்னுடைய  வீட்டினை லீஸ்-க்கு விடுவதாக ஓ.எல்.எக்ஸ்., மூலமாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை  மதுரை மாநகர் ஆவின் நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் வீட்டிற்கு புகழ் இந்திராவிடம்  8 லட்சம் ஒத்திக்கு பேசி முடித்து ஒப்பந்த பத்திரத்தில் பதிந்துள்ளார். இதனையடுத்து 30 நாட்கள் கழித்து அருண்குமார் நேரில் சென்று புகழ் இந்திராவிடம் கேட்டபோது இன்னும் பெயின்ட் அடிக்க வில்லை என கூறி 2 வாரம் கழித்துவந்து சாவியை வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 

 

இதை தொடர்ந்து இரு வாரம் கழித்து நேரில்சென்று பார்த்தபோது புகழ் இந்திரா தலைமறைவாகியுள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் கேட்டபோது கடந்த ஒரு வாரமாக உங்களைப் போல் பல்வேறு நபர்கள்  லீஸ்-க்கு பணம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.  இதனையடுத்து அருண்குமார் உள்ளிட்ட 4 பேர் கூடல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து புகழ் இந்திராவை கைது செய்த காவல்துறையினர்  அவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேரிடம்  இதே போல வீட்டை லீஸ்-க்கு விடுவதாக கூறி ஓஎல்எக்ஸ் மூலமாகவும், புரோக்கர்கள மூலமாகவும் மொத்தம் 40 லட்ச ரூபாய்  மோசடி செய்து தெரியவந்துள்ளது. சிலர்  பணத்தை கேட்டபோது திமுக கட்சியில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுடன்  எடுத்துக் கொண்ட போட்டோவை காட்டி பணம் தர முடியாது என  மிரட்டியுள்ளார்.



அவர் லீஸ்-க்கு விடுவதாக கூறப்படும் வீட்டின் பேரில் சில வருடங்களுக்கு முன்னர் போடபட்ட வழக்கு ஒன்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த கூடல்புதூர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு வீட்டைக் காட்டி 4 க்கும் மேற்பட்டோரிடம் ஒத்திக்கு விடுவதாக கூறி 40 லட்ச ரூபாய் பண மோசடி செய்த சம்பவம்  காவல்துறையினர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.