பெரம்பலூர் மாவட்டம்,  குரும்பலூர் அருகே ஈச்சம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தாவாக அதே ஊரை சேர்ந்த இளையராஜா (வயது 43) உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கோவிலில் மின் விளக்குகளை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் இளையராஜாவிற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இளையராஜா அங்கு வந்து பார்த்தபோது, கோவிலின் 'கிரில் கேட்' பூட்டு மற்றும் கோவில் சன்னதி மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த முக்கால் பவுன் பொட்டு தாலி, லட்சுமிகாசு, மாங்காய் காசு 2, கால் பவுன் குண்டு ஆகியவை அடங்கிய 2 பவுன் நகைகள் திருட்டுபோயிருந்தன. மேலும் கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து கோவிலுக்கு வெளியே வைத்து, அதன் பூட்டை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதனை தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இது போன்று திருட்டி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், பெண்களை குறிவைத்து இரவு நேரங்கள் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து செல்கின்றனர். இதனால பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்த தொடர் கொள்ளை சம்பவங்களை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கூறுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்றச்சம்பங்களை தடுக்க 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ஆகையால் சந்தேகம்படும்படி நபர்கள் இருந்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும்” என்றனர். குறிப்பாக அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.