பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் (வயது 42) . இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் மனைவி ராதிகா (28), அதே நிறுவனத்தை சேர்ந்த முகவர் தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சிவா, குமார், பிரபாகரன் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 11 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தி கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை கடந்த 23ம்தேதி அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியிருந்த முகவர் தர்மலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 




தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடிகள் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மேலும் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை நம் அனைவருக்கும் உள்ளது.  ஆனால் சரியான முறையில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்க வேண்டும்.  ஆனால் உடனடியாக குறுகிய காலத்தில் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என மனநிலையோடு பொதுமக்கள் உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலர் தனது நிறுவனத்தின் முதலீடு செய்தால் ஆறே மாதத்தில் அதிக அளவில் பணத்தை பெறலாம் என்றும், 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் 5 லட்ச ரூபாய் தருகிறோம், போன்று பல்வேறு விதமான ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி மோசடிகள் நிகழ்ந்து வருகிறது.  இவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மோசடிகளை குறித்து பலமுறை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், இன்னும் சிலர் அதை கருத்தில் கொள்ளாமல் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள் என்ற செய்தி தான் வேதனை அளிக்கிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண