தலைநகர் புதுதில்லி விமான நிலையத்தில் பாங்காக் செல்லும் இந்தியப் பயணி ஒருவர், தனது டிராலி பேக் கைப்பிடிகளில் சுமார் ரூ.64 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறி சிஐஎஸ்எஃப் பணியாளர் அவரை கைது செய்துள்ளனர். இது குறித்த தகவலை விமானநிலைய அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். 


எக்ஸ்ரே ஸ்கேனரில் கரன்சி நோட்டுகளின் படம் காணப்பட்டதை அடுத்து  பாதுகாப்பு சோதனையின் போது பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.  பணத்தை எடுத்துச் சென்ற அந்த நபர் தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் டெர்மினல்-III இல் பாதுகாப்புப் பணியாளர்களால் அந்த நபர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதை அடுத்து அவர் அங்கே வைத்து கைது செய்யப்பட்டார். அந்த பயணி தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் பாங்காங்கிற்கு செல்லவிருந்தார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மறைத்து வைக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை ஸ்க்ரூடிரைவர் மூலம் வெளியே எடுத்த அதிகாரிகள் சுமார் ரூ.64 லட்சம் மதிப்புள்ள 68,400 யூரோக்கள் மற்றும் 5,000 நியூசிலாந்து டாலர்களை மீட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் மேலதிகாரர்களின் விசாரணைக்காக அந்த நபர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்




முன்னதாக,


சென்னை விமான நிலையத்தில் 3 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ.94.14 லட்சம் மதிப்புள்ள 1.89 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை சென்னை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, தங்கம் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது  


இந்நிலையில்,  துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK 0544 என்ற விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி, சுங்கத் துறையினர் அந்த விமானத்தில் வந்தவர்களிடையே சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு ஆண் பயணி தன்னுடைய ஷீ மற்றும் ஷாக்ஸில் 24 கேரட் தங்க பெஸ்டை மறைத்துவைத்து கடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.66.82 லட்சம் என்றும், தங்கத்தைக் கடத்த முயன்ற நபரையும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.  கடந்த 25 -ஆம் தேதியன்று இதேபோன்று இருவரிடம் சோதனை நடத்தியதில் 27.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


துபாயில் இருந்து வந்த FZ-447 விமானத்தில் இரண்டு ஆண் பயணிகள் 24 கேரட் தங்கத்தை 36 தங்க உருளைகள் லேப்டாப் ஜார்ஜர்களின் ப்ளக் பின்களில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். இதை அவர்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை கண்டறிந்த சுங்கத் துறையினர் அவர்களை கைது செய்தனர்