கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல் காங்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் ஜெயபால் (23) இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இதில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பம் ஆனதால் விஷயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தந்தை கருணாகரன் பண்ருட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ஜெயபாலுவை தேடி வந்த நிலையில்,  மற்றொரு 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரையும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் மேலும் ஒரு வழக்கு முத்தண்டிகுப்பம் காவல் நிலையத்தில் பதிவு செய்து வாலிபர் ஜெயபாலை கைது செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து இரண்டு சிறுமிகளை ஏமாற்றி வன்கொடுமை  செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.







ஒன்றாய் பறந்த அதிமுக திமுக கொடிகள்

 

விருத்தாசலத்தில் அதிமுக 51 வது பொன்விழா மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி வானொலி திடலில் நடைபெற்ற   நிலையில் அதிமுக கொடியுடன் திமுக கொடியும் இணைந்து பறந்ததால் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக 51 வது பொன்விழா மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நேற்று வானொலி திடலில் நடைபெற்ற நிலையில், இந்நிகழ்ச்சிக்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தலைமையில்  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டார். இதற்காக கட்சிக் கொடிகள் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாலக்கரையில் இருந்து கடைவீதி வரை செல்லக்கூடிய சாலை இருபுறங்களிலும் கொடிகள் கட்டப்பட்டது. இதில் அதிமுக கொடியுடன் திமுக கொடியும் இணைந்து பறந்ததால் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளும் எதிரும் புதிரும் ஆக உள்ள நிலையில் தற்போது இரு கட்சி கொடிகளும் இணைந்து பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் அதிமுக தொண்டர் ஒருவர் அதிமுக கொடியுடன் கட்டப்பட்ட திமுக கொடியினை அகற்றினார்.