மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும்,  அது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள்,  ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனையின் அடிப்படையில், ஆணைக்காரன் சத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் உத்தரவிட்டார். 




அதே நேரத்தில் ஊராட்சிமன்றத் துணை தலைவராக உள்ள சிவப்பிரகாசம் என்பவரை பொறுப்பு தலைவராக செயல்படும்படி ஆணையிட்டு, அதற்கான கடிதத்தையும்  ஆட்சியர் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிக்கு,  புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த கட்டடம் கட்டும் பணியை இங்கு எழுத்தராக பணிபுரியும் சோழராஜன் என்பவர் யாரிடமும் கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக தொடங்கியுள்ளார்.


India in WTC Final: பும்ரா, பண்ட் வரிசையில் ஷ்ரேயர் ஐயரும் காயம்.. WTC இறுதிப்போட்டியில் இந்தியாவின் நிலை என்ன?




சிதிலமடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) துணைத் தலைவர் சிவபிரகாசம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட யாரிடமும் பூமி பூஜை போடுவதை தெரிவிக்காமல் தன்னிச்சையாக பூமி பூஜை போட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) சிவப்பிரகாசம் நேரில் சென்று எழுத்தர் சோழராஜனை கேட்டதற்கு, நான் அப்படி தான் செய்வேன், அதைக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என தரக்குறைவான வார்த்தைகளை  பேசியதாக கூறப்படுகிறது.


Fire Accident:பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு - காஞ்சிபுரத்தில் பெருத்த சோகம்




இதனால் ஆத்திரமடைந்த துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூஜை போடுவதை தடுத்து நிறுத்தியதுடன், ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் எழுத்தர் சோழராஜன் மீது புகாரும் அளித்துள்ளனர். அதனடிப்படையில் சோழராஜனிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைகளுக்கு மதிப்பளிக்காமலும், விதிமுறைகளை மீறி ஊராட்சி மன்ற செயலர் செயல்பட்ட விதம் அனைவரைருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


IND vs AUS 3rd ODI: 4 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தொடரை இழக்காத இந்திய அணி.. தாக்குதலை தொடுக்குமா ஆஸ்திரேலியா?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண