பிளாஸ்டிக் பையில் வலி நிவாரண மாத்திரைகள்

சென்னை பெருநகர காவல் P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கொடுங்கையூர் R.V.நகர் மயானம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது , அங்கு கையில் பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்த போது , அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

மாத்திரைகள் பறிமுதல்

சந்தேகத்தின் பேரில் அவரது கையிலிருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது , சட்ட விரோதமாக விற்பனைக்காக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (எ) குரு ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து  60 TYDOL உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதே போல R-7  கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் முருகேசன் தெரு , வேம்புலியம்மன் கோயில் தெரு சந்திப்பு அருகில் கண்காணித்து , அங்கு சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ( வயது 23 ) , அசோக்நகர் பகுதியை சேர்ந்த விஜய் ( வயது 25 ) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 59 TYDOL  மற்றும் NITRAVET  உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி கோவிந்தராஜ் மீது 1 வழக்கும், விஜய் மீது 4 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.  கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்டோவில் , குட்கா புகையிலை பொருட்கள் கடத்தல். 94 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஆதம்பாக்கம்,  அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, அருகே வாகனசோதனை பணியிலிருந்த போது , அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது , ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதன் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை ஆட்டோவில் கடத்தி வந்த இராமநாதபுரம் திருவாடனை பகுதியை சேர்ந்த அசாரூதின் (வயது 26) ,  பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த அப்பு ( வயது 38)  மற்றும் அஜித்குமார் (வயது 26) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹான்ஸ் , கூலிப், உட்பட மொத்தம் சுமார் 94 கிலோ கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய  1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் ஏற்கனவே அசாரூதின் மீது 1 வழக்கும் மற்றும் அஜித்குமார் மீது 1 வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் (04.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.