விழுப்புரம்: மரக்காணம் அருகே இரவோடு இரவாக நகை கடையின் சுவற்றில் துளையிட்டு திருட்டு. குற்றவாளிகள் காவலர்களிடம் சிக்காமல் இருக்க அணைத்து ஆதாரங்களையும் சேர்த்து திருடி சென்ற திருடர்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழுக்கு கடற்கரை சாலை அருகே உள்ள  அனுமந்தை பகுதியில் சாந்தாராம் என்பவர் 18 ஆண்டுகளாக கணேஷ் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.


H Raja Speech: ஸ்டாலினை கடுமையாக சாடிய ஹெச்.ராஜா


Syed khan ADMK | "சசிகலாவுக்காக உறுதியாக நிற்கிறோம்.." மீண்டும் பேட்டிகொடுத்த சையதுகான்


இரவு பூட்டியிருந்த நகை கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று  திருட முயன்றுள்ளனர். நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை திறக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் கல்லாவில் இருந்த 10,000 பணம் மற்றும் சிசிடிவி ஆதாரங்களையும் சேர்த்து திருடி சென்றுள்ளனர். திருட வந்தவர்களுக்கு சிசிடிவி காட்சிகள் எதில் பதிவாகும் என்று தெரியாத காரணத்தினால் அங்கு இருந்த ,சிசிடிவி கேமரா, மானிடர், சிபயு, ஹர்ட்டிச்க்,  டிவிஆர், பிரிண்டர், உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களையும் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னெச்சரிக்கையாக சிசிடிவி கேமராவில் கருப்பு மையினை அடித்து விட்டு திருடி சென்றுள்ளனர்.


A Raja Speech: ஸ்டாலினை கண்டு மோடி, அமித்ஷா பயப்படுகிறார்கள் :ஆ.ராசா


BJP Annamalai Statement | 8 மாவட்டங்களை தூக்கிய பாஜக.. அண்ணாமலையின் வாத்தி ரெய்டு! | local body 2022


காலை கடையை திறந்த நகை கடை உரிமையாளர் கடையின் உள்ளே பொருட்கள் சிதறிகிடப்பதை பார்த்துள்ளார். மேலும் கடையின் பின்புறம் பெரிய துளையிட்டு இருப்பதை கண்ட உரிமையாளர் உடனே மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த மரக்காணம் காவலர்கள் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனிப்படை காவலர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தும் மற்றும் மோப்ப நாய் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.