கடந்த மாதம் 26 ஆம் தேதி ஷாமிலி என்பவர் ஓலா ஆட்டோ புக் செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் அருகே நின்றும் 15 நிமிடங்கள் ஆகியும் வரவில்லை என்பதால், போன் கால் செய்து அழைத்திருக்கிறார் ஷாமிலி. அதற்கு அவர் சாலை சரியில்லை உள்ளே ஆட்டோ வராது, நீங்கள் வெளியே நடந்து வாருங்கள், இங்கிருந்து போகலாம் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி பல தகாத வார்த்தைகள் கூறி பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி ஓலா சாட் பாக்சில் வந்து கெட்ட வார்த்தை பேசி மிரட்டியிருக்கிறார். "நீ வெளியில வந்த செத்த" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவரையும் அவரது குழந்தையும் அவரது கணவரே காரில் கொண்டு போய் விடுவதாக கூறி இருக்கிறார். அப்போது அவர்கள் காரில் வெளியே சென்ற போது அவர்களுக்காக காத்திருந்து அடையாளம் கண்டுபிடித்து பின்தொடர்ந்து வந்திருக்கிறார். இது குறித்து ஐந்து நாட்கள் முன்புதான் மெயிலில் ஓலாவிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.




ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து மேலும் பிரச்சனைகள் வராமலிருக்க சம்பவம் நடந்து 20 நாட்கள் கழித்து புகார் அளித்துள்ளதாக மெயிலில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தாங்கள்தான் புகாரளித்தோம் என்பதை ஓட்டுனரிடம் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அளித்த மெயில் புகாருக்கு ஐந்து நாட்கள் ஆகியும் ஓலாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், ட்விட்டரில் ஓலாவை டேக் செய்து பதிவு ஒன்றை இட்டிருக்கிறார். அத்துடன் மெயில் செய்த போட்டோக்கள், அவர்கள் புக் செயத ஆதாரங்கள், அந்த ட்ரைவர் கெட்ட வார்த்தையோடு கொலை மிரட்டல் விடுத்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த பதிவில், "நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஓலாவை பயன்படுத்தி வருகிறேன், இந்த ஒரு சம்பவத்திற்காக ஓலாவை நான் புறக்கணிக்க போவதில்லை, ஆனால் ஐந்து நாட்களாகியும் எனக்கு பதில் அளிக்காதது வருத்தமளிக்கிறது. உங்களிடமிருந்து உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்." என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு ஓலா, "இப்படி நிகழ்ந்தது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது, இது தொடர்பான கண்டிப்பான விதிமுறைகளை ஓட்டுனர்களுக்கு தெரிவித்துள்ளோம், உங்களது புகாரை மெலிடத்திற்கு அனுப்பி உள்ளோம், கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் விரைவில் நடைபெறும். இனி இது போன்று நிகழாமல் பார்த்துக்கொள்ளகிறோம்." என்று கூறியிருந்தது.



இரு தினங்கள் முன்னர் சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று படமெடுத்தது வைரலாகி, கடுமையான எதிர்புகளை சந்தித்து, பெரும் புரட்சி வெடிப்பை கிளப்பி இருந்தது. தற்போது ஓலா ஆப்பில் இது போன்ற பிரச்சனை வந்துள்ளது. இது போன்று மக்களிடம் நேரடி சேவையில் உள்ள உணவு டெலிவரி, டாக்சி, வீட்டு வேலைகள் ஆகிய கார்பரேட்கள் வாடிக்கையாளர்களிடம் சேவகர்களும், கஸ்டமர் கேர் எக்சிக்யூட்டிவ்களும் பேசும் முறைக்கான விதிமுறைகளை மறு பரிசீலனை செய்யும் தேவை வந்திருப்பதை தொடர் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது போன்ற ஆப் சம்மந்தபட்ட வேலைகள் தகுந்த கட்டமைப்புகளுடன் இயக்காமல் மேலோட்டமாக மக்களையும் சேவர்களையும் இணைப்பதால் இது போன்ற பிரச்னைகள் எழுகின்றன. இதனை களைய அந்தந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தனித்தனியே அவர்கள் சேவைக்கு ஏற்றார் போல விதிமுறைகளை மறு பரிசீலனை செய்யவேண்டும், அல்லது அரசு பொதுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.