சமீப காலங்களாக தொழில்நுட்பங்களின் உதவிகளுடன் நீண்ட நாட்களாக முடிக்கப்படாத குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வழக்கை காவல்துறை தற்போது குற்றவாளியை கண்டறிந்து முடித்து வைத்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் 1972ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். அந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் கொலைக்கான நோக்கம் ஆகியவை குறித்து காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர். எனினும் அவர்களால் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இந்த வழக்கு கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வந்துள்ளது.
இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டு ஜார்ஜியா பகுதியில் வடுகா கவுண்டியில் ஒரு கொலை குற்றவாளியை அவருடைய மகன் சந்தித்துள்ளார். அப்போது அவருடைய தந்தை நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கரோலினா மலைப்பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்ததாக கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலை வடுகா கவுண்டி காவல்துறையினர் வடக்கு கரோலினா பகுதி காவல்துறையினருக்கு அளித்துள்ளனர். இந்த தகவலை வைத்து வடக்கு கரோலினா பகுதி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அப்போது பில்லி டேவிஸ், பில்லி பிரட்,பாபி ஜீன்,டேவிட் ரீட் ஆகிய நான்கு பேர் 1970களில் பல கொலைகள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் நான்கு பேர் சேர்ந்து செய்த கொலைகளில் இந்த மூன்று கொலைகளும் ஒன்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதில் டேவிஸ் தவிர மற்ற அனைவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. மேலும் டேவிஸ் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை வைத்து 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த வழக்கை காவல்துறையினர் தீர்த்து வைத்துள்ளனர். இந்த வழக்கில் ஜார்ஜியா கவுண்டி காவல்துறையினர் கொடுத்த தகவல் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. அதை வைத்து இந்த வழக்கை காவல்துறையினர் முடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஒரே சைஸ்.. அதான் கைமாத்திட்டேன்! 2 வது திருமணத்தின் போது முன்னாள் மனைவியிடம் சிக்கிய கணவன்!