அரூர் அருகே இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி மர்மமான முறையில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஜெயகுமார் (எ)பிரதீப்- சோனியா, (20) இருவருக்கும்  கடந்த 11 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பிரதீப் கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். பிரதீப் மனைவி சோனியா, 9 மாத நிறைமாத  கர்ப்பிணியாக இருந்துள்ளார். சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக்கண்ட சோனியா அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

 



 

 

இன்று சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில்   இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடததிற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் சோனியாவின் கணவர் மற்றும் அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வராததால்,  பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

 



 

இதனால் சோனியாவின் மரணத்திற்கு தங்கவேலு, பொன்னம்மாள், ரஜினி, பவானி, ஜெயக்குமார் என்கின்ற பிரதீப் என 5 நபர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். தனது மகள் இறப்பில் மர்மம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் கொலையா? தற்கொலையா? என அரூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இன்று சோனியாவுக்கு வளைகாப்பு நடைபெற உள்ள ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் தூக்கில் தாங்கியபடி சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.

 

 



 

 

காரிமங்கலம் அருகே சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 11 இலட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா பறிமுதல்-ஒருவர் காவல் துறையினர் கைது.

 



 

 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா மற்றும் போதை வஸ்துக்கள் ஜோராக விற்பனை நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் காரிமங்கலம் காவல் துறையினர் தீவிர சோதனை செய்து, விசாரனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காரிமங்கலம் அருகே குப்பாங்கரை கிராமத்தில் குமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பண்ணை வீட்டில் சோதனை நடத்தினார்.

 



 

அப்பொழுது தடைசெய்யப்பட்ட  போதை பொருட்கள் மற்றும் குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் சுமார் 11லட்சம் மதிப்பிலான, 2 டன் போதைப் பொருட்கள் 70 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து  காவல் துணை கண்கானிப்பாளர் தினகரன் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கடராமன்  ஆகியோர் கொண்ட காவல் துறையினர் குட்காவை  பறிமுதல் செய்து,  குமார் என்பவரை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபுவின் 2.0 ஆப்ரேசனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தினமும் குட்கா,  கஞ்சா விற்பனையாளர்கள் கைது தொடர்ந்து வருகிறது, குறிப்பிடத்தக்கது.