பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அவ்வப்போது விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, அண்ணாசாலையில் சோதனை நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீடூர்,எலந்தங்குடி, கிளியனூர்,உதிரங்குடி, உத்தங்குடி உள்ளிட ஐந்து இடங்களில்  சென்னையில் இருந்து வந்துள்ள என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜீத் தலைமையில் ஐந்து ஆய்வாளர் கொண்ட  அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.




மயிலாடுதுறையில் சட்டத்துக்கு புறம்பாக மர்ம கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் ஒருவர் கார் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், அந்த காரை பிப்ரவரி 21 ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது, அந்த காரில் நீடூரை சேர்ந்த சாதிக் பாஷா, ஜஹபர்அலி, கோவை முகமது ஆசிக்,  காரைக்கால் முகமது இர்ஃபான், சென்னை அயனாவரம் ரஹ்மத்  இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை  காவல்துறையினர் விசாரணைத்தபோது போலீசாரை சாதிக் பாஷா தூப்பாகியை காட்டி மிரட்டியுள்ளர். இதனை அடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கலிபா பார்ட்டி ஆப் இந்தியா, கலிபா  பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை நடத்தி வந்துள்ளன. இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும், இதன் பின்னணியில் தமிழகத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு ஒன்று எடுப்பதை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.




அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்திவரும் என்ஐஏ அதிகாரிகள் இந்த அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போது தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது. அதன் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த கும்பல் எது? என்பது குறித்து அதிகாரிகள் தகவல் திரட்டிய நிலையில், இன்று என்ஐஏ அதிகாரிகள் மயிலாடுதுறையில் சாதிக் பாஷாவுக்கு சொந்தமான ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.