தேசிய புலனாய்வு அமைப்பு ( என்.ஐ.ஏ ) நாடு முழுவதும் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. 



மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் பூசணிக்காய், தேங்காய் உடைப்பதை கண்டிக்கும் விதமாக தன்னார்வலர் நூதன விழிப்புணர்வு

 

பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருக்கும் சந்தேக நபர்களின் இடங்களில் தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்மந்தமாக இருக்கலாம் என காவல்துறை தகவல் தெரிவித்து வருகின்றனர்.

 


 

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள காஜிமார் தெருவில் முகமது தாஜூதீன் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஹைதரபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தாஜூதீன் அஜ்மல் என்பவரிடம் விசாரணை நடத்த சென்ற நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அவரது குடும்பத்தினரிம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.