Crime: உத்தர காண்டில் பெண்ணை ராணுவ அதிகாரி ஒருவர், சுத்தியலால் அடித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்:
உத்தர காண்ட் மாநிலம் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேந்து உபாத்யாய் (40). ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் இருந்து டேராடூனுக்கு மாற்றப்பட்டார். சிலிகுரியில் இருந்தபோது, நேபாள வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரேயா ஷர்மா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவரை முதன்முதலாக அங்குள்ள பார் ஒன்றில் சந்தித்துள்ளார் ரமேந்து உபாத்யாய். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் அவர் நட்பாக பழகி வந்திருக்கிறார். இவர்களது நட்பு, சிறிது நாட்கள் கழித்து திருமணம் மீறிய உறவாக மாறியது. அதாவது, ரமேந்து உபாத்யாய்க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிகிறது.
இதனை அடுத்து, ரமேந்து உபாத்யாய்க்கு உத்தர காண்ட் மாநிலம் டேராடூனுக்கு மாற்றப்பட்டார். இதனால் நேபாளி பெண்ணான ஸ்ரேயா ஷர்மாவுடன் டேராடூனுக்கு வந்திருக்கிறார். அங்கு வந்த அவர், அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இருவரும் ஒரே வீட்டில் விசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பெண் ஸ்ரேயா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரமேந்து உபாத்யாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு மறுத்த உபாத்யாக் அவரிடம் நாள்தோறும் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி சென்றுக் கொண்டு இருக்க, பெண் ஸ்ரேயாவின் தொல்லை காரணமாக அவரை கொலை செய்ய முடிவு செய்தார் உபாத்யாய்.
சுத்தியலால் அடித்து கொன்ற கொடூரம்:
சம்பவத்தன்று, பாரில் ஸ்ரேயாவுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் உபாத்யாய். இதன்பின், வெளியில் எங்கேயாவது சென்று வரலாம் என்று கூறி காரில் ஸ்ரோயாவை அழைத்துச் சென்றுள்ளார் உபாத்யாய். அப்போது, யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய அவர், அந்த பெண்ணின் தலையில் சுத்தியலால் பலமுறை அடித்து கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, அவரது உடலை சாலையோரம் வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பி சென்றிருக்கிறார். இதன்பின், அடுத்த நாள் போலீசாருக்கு பெண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி மேராக்களை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளியான ரமந்து உபாத்யாயை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் ஸ்ரோயாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். திருமணம் மீறிய உறவால் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க