நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் ராஜா (வயது 47), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வீரவநல்லூர் மெயின்ரோட்டில் சாலையோரம் ராஜா தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோ கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக அதிவேகத்தில் வந்த கார் ராஜா மீது மோதி அவரை சிறிது தூரம் இழுத்துச்சென்று தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த ராஜா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் சுற்றியிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். பின் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராஜாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து பார்த்தனர். ஆனால் எந்த வித அசைவும் இல்லாத நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலு இது தொடர்பாக வீரவ நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 


தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சாமுவேல் சாம்சன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் பாபநாசம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம்  நின்று தனது ஆட்டோவின் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்த  ராஜாவின் மீது மோதியது தெரிய வந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.




இந்த நிலையில் கார், ராஜா மீது மோதும் பரபரப்பு சம்பவம் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகிய நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது... அதில் ராஜா சிறிது தூரம் இழுத்துச்சென்று தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் காரை ஓட்டி வந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் எதிர்ப்பார்க்காத நொடிப்பொழுதில் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண