நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ளது பக்திநாதபுரம். இப்பகுதியில் வசித்து வருபவர் உஷா தேவி (வயது 62), இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். உஷா தேவி மட்டும் வடக்கன் குளம் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.. இந்த சூழலில் உஷா தேவி நேற்று வெளியே நடமாட்டம் இல்லாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்ததில் கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக மகளுக்கு தகவல் தெரிவித்து அவர் வந்து பார்த்த போது உஷா தேவி கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது பவுன் தங்கச் செயின் மற்றும் இரண்டு சவரன் வளையல் ஆகியவற்றையும் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் உஷா தேவியின் உடம்பு, கழுத்து பகுதியில் சின்ன சின்ன காயம் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து ராதாபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விசாரணையில் வீட்டில் உள்ள சிசிடிவி-DVR உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கேமரா ஒன்றியில் மர்ம நபர் அவர் வீட்டினுள் வந்து சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் பல்லவிளையை சேர்ந்த இளஞ்சிறாரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைக்காக அந்த நபர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு துணையாக இருந்த பல்லவிளையை சேர்ந்த இளஞ்சிறார், கோலியான்குளத்தை சேர்ந்த உதயபிரகாஷ், மற்றும் அவரது மனைவி சகாயசுபா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நகைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகைக்காக இளஞ்சிறார் உட்பட 4 பேர் வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் சிசிடிவி உதவியுடன் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்