நெல்லை மாவட்டம் சாந்தி நகர் அருகே 27வது  தெருவில் குடியிருந்து வருபவர் அபுதாகிர். இவர் டக்கரம்மாள்புரத்தில் இயங்கி வரும் ஒரு கார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கேடிசி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்று விட்டு நேற்று (28-04-23) இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், உள்ளே சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியே பீரோ சாவி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் இருந்த 15 சவரன் நகை இரண்டு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.




இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அபுதாகிர் உடனடியாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) வாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அபுதாஹிர் வீடு கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. இதனால் நகையை அடமானம் வைத்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி பீரோவில்  வைத்துள்ளார். இந்த நிலையில் தான் அந்த பணமும் நகையும் திருடு போனது தெரியவந்தது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு  மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களும் வீட்டில் இருந்த கைரேகைகளை சேகரித்தனர். தொடர்ந்து இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண