நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.




அப்போது அங்கு நின்றிருந்த ஊழியர்களிடம் ஆட்டோ குமார், பாலசுப்பிரமணியன், சிவராமன் மற்றும் மனீஸ்ராஜா ஆகியோர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது, பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக தகராறு செய்ததாகவும், மேலும் தகராறில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது, அப்போது அங்கு பெட்ரோல் போட வந்த  கலைச்செல்வன் அதனை தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.






அப்போது ஆட்டோ குமார், பாலசுப்பிரமணியன், சிவராமன் மற்றும் மனீஸ்ராஜா ஆகியோர் சேர்ந்து கலைச்செல்வனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,




மேலும் இது குறித்து தகராறில் ஈடுபட்ட பணகுடியை சேர்ந்த ஆட்டோ குமார், பாலசுப்பிரமணியன், சிவராமன் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மனீஸ் ராஜாவை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். பெட்ரோல் பல்கில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெட்ரோல் பங்கில் அடிதடி தகராறு ஏற்படும் காட்சிகளும் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனடிப்படையிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இச்சம்பவத்தால் உயிரிழந்த கலைச்செல்வனுக்கு இரண்டு கைக்குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.