விழுப்புரம்: விழுப்புரத்தில் மின் ஊழியர்களின் அலட்சியத்தால் பயன்பாடு இல்லாமல் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் கோவில் வாசலில் படுத்திருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கிழக்குப் பாண்டி சாலை LIC அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் வாசலில் தினமும் பிச்சை எடுத்துவிட்டு ராமலிங்கம் கனேசன் ஆகியோர் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலைலையில் வழக்கம் போல் நேற்று இரவு கோவில் வாசலில் இரண்டு முதியவர்களான விழுப்புரம் காலேஜ் ரோடு பகுதியை செர்ந்த கணேசன் (52), கடலூர் ஓ.டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (70) ஆகியோர் படுத்து உறங்கியுள்ளனர்.
Suicide : கள்ள உறவில் தகராறு.. கட்டுமானப் பணியாளர் காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
அப்போது கோவில் அருகில் இருந்த, மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் முறிந்து கணேசன் என்பவரின் மார்பு பகுதியில் விழுந்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனேசன் அருகில் படுத்துறங்கி கொண்டிருந்த ராமலிங்கம் என்பவரின் மேல் மின் கம்பம் விழுந்ததில் இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டு காயமடைந்ததுள்ளார். மின்கம்பம் முறிந்து விழுந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் தொடர்பாக டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Ponmudi Latest Speech : பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டதில் என்ன தவறு?..கொதித்தெழுந்த அமைச்சர் பொன்முடி
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்த கனேசனின் உடலை மீட்டும், கால் முறிவு ஏற்பட்ட ராமலிங்கத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் கம்பம் முறிந்து விழுந்து சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Annamalai As Actor : நடிகராக அவதாரம் எடுத்த அண்ணாமலை ! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்