நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு கோவைகுளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (41). இவரது மனைவி கிருஷ்ணவேணி.  சுப்பையா விவசாயம் செய்து வருகிறார்.. இந்த நிலையில் வழக்கம்போல் இன்றும் விவசாய பணிக்காக தோட்டத்திற்கு சென்று உள்ளார். அவரது மனைவியும் வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை அறிந்து கொண்ட அவர்கள் பின்பக்கம் வழியாக வந்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.  பின் வீட்டினுள் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் செல்போனையும் திருடிச் சென்று உள்ளனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கிருஷ்ணவேணி பீரோ திறக்கப்பட்டு நகைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.




இது தொடர்பாக தகவலறிந்த சுப்பையா மூன்றடைப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது  பீரோவில் இருந்த வளையல், செயின், கை செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 17 பவுன்  எடையுள்ள தங்க நகைகளையும், ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் திருடி சென்றது தெரியவந்தது..  மேலும் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ 9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மூன்றடைப்பு போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த துணிகர திருட்டு அப்பகுதியில் அச்சத்தையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண