சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில்  தேவகோட்டையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கனவர் தனது மூளை வளர்ச்சி குன்றிய மகனுடன் வந்து பாதுகாப்பு கோரி  மனு அளித்தார்.

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தச்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் -  மீனாட்சி தம்பதியர். இவர்களது மகன் ராஜா மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கும் செல்வராஜின் தம்பி சேகர் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்துவந்த நிலையில் நேற்று செல்வராஜின் தம்பி சேகரின் மகன் பாலா என்ற பாலாஜி நேற்று செல்வராஜின் மனைவி மீனாட்சியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டார்.




இது குறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இன்று செல்வராஜ் தனது மூளை வளர்ச்சி குன்றிய மகனான ராஜாவுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரை சந்தித்து தனக்கும், தனது மகனுக்கும் எதிரிகளால் உயிர் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றும். எனவே தனக்கும், தன் மகனுக்கும் பாதுகாப்பு வழங்கவும் கோரி மனு அளித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.



இது குறித்து செல்வராஜ் நம்மிடம், "கொலை செய்த நபர்கள் என் மனைவியை தொடர்ந்து தாக்கி வந்தனர். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து காவல்நிலையத்தில் கேட்ட போது ”காயமே இல்ல கம்பிளைண்ட் கொடுக்க வரியா” என எஸ்.ஐ ரவி என் மனைவியிடம் சொல்லியுள்ளார். மேலும் ”அடிக்கடி, போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா உன்ன எஸ்.ஐ போட்டுத்தள்ள சொல்லியுள்ளார்” என கொலை செய்த பாலா என் மனைவியிடம் தெரிவித்துள்ளான். ஆனாலும் காவல்நிலையத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. என் மனைவி கொடுத்த புகாரை எஸ்.ஐ ரவி அலட்சியப்படுத்தாமல் விசாரித்திருந்தால் கொலை நடந்திருக்காது. என் மனைவியை இழந்திருக்க மாட்டேன். என் மனைவியைதான் இழந்துவிட்டேன்.



இங்கே கவனிக்கவும் *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 

மூளை வளர்ச்சி இல்லாத என் மகனையாச்சும் காப்பாற்றுங்கள்” என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். வறுமையின் காரணமாக வெளியூரில் வேலை செய்துவந்தேன். இந்நிலையில்தான் என் மனைவியை  கொலை செய்துவிட்டனர். மூளை வளர்ச்சி இல்லாத என் மகனை, என் மனைவி தான் கவனித்துவந்தார். இந்நிலையில் யாரும் இல்லாத அநாதையாக மாறிவிட்டோம். எனக்கும் என் மகனுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லை. அதனால் கலெக்டர் சாரிடமும், எஸ்.பி சாரிடமும் மனு அளித்துள்ளேன். மனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.