பெண் மீது ஆசிட் வீச்சு
தெற்கு மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் மார்க் பகுதியில் நேற்று அதிகாலையில் 62 வயதுடைய நபர் ஒருவர் மருத்துவமனையில் வேலை செய்து வந்த பெண் மீது ஆசிட் வீசியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியான 62 வயதுடைய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
முன்விரோதத்தால் அத்துமீறல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், " தெற்கு மும்பையை சேர்ந்தவர் மகேஷ் பூஜாரி(65). இவரும் அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் ஒரு வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வருகின்றனர். 50 வயதுடைய பெண்ணின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் மகேஷ் பூஜாரி உடன் பழக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வந்தனர். அதே போன்று மகேஷ் பூஜாரிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டது என தெரிகிறது.
அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அந்த பெண்ணானது மும்பையில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டது தெரிகிறது. இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் குழந்தைகள் மகேஷ் பூஜாரியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியிருந்தனர். அந்த பெண்ணும் முதல் மனைவியுடன் இருக்குமாறு சொல்லியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த மகேஷ் பூஜாரி அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்தார். மருத்துவமனையில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண் மீது மகேஷ் பூஜாரி ஆசிட் அடித்து விட்டு தப்பியோடியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கையில், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு கிட்டத்தட்ட 15% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கழுத்து, தலை, தோள்பட்டை மற்றும் கைகளின் பாகங்கள் எரிந்துள்ளன. காயங்கள் பெரிதாக இல்லை, சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான மகேஷ் பூஜாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்
அசாம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், 30 வயதான பாதிக்கப்பட்ட பெண், தெகியாஜூகியில் உள்ள ராக்யாஸ்மாரி என்ற இடத்தில் உள்ள ஒரு சாலையில் வேலை முடிந்து தனது வீடு நோக்கி சென்றுள்ளார். அப்போது, அருகிலிருந்த தேயிலை தோட்டத்தில் இருந்து ஒரு இளைஞன் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்துள்ளார். அந்த பெண் வாகனத்தை நிறுத்தாததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பெண்ணின் மீது ஆசிட் வீசியுள்ளார். பின்னர், குற்றாவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.