மும்பையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 40 வயது பெண்ணுக்கு 8 முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னை கொடுமை படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் புகார் போலீசாரையே அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 8 முறைக்கு மேல் அப்பெண்ணுக்கு கருக்கலைக்கு செய்யப்பட்டுள்ளது. ஆண்குழந்தை கருத்தரிப்புக்காக கிட்டத்தட்ட 1500 ஸ்டெராய்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.




2007ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. படித்த ஒரு குடும்பத்தில் மருமகளாக சென்றுள்ளார் அப்பெண். கணவனும், மாமியாரும் வழக்கறிஞர்கள், கணவரோடு பிறந்த பெண் டாக்டர் என படிப்பில் பிரமாண்டமாக இருந்துள்ளது அக்குடும்பம். அப்பெண்ணுக்கு  2009ல் ஒரு பெண்ணும், 2011ல் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் தன்னுடைய குடும்பத்தை கட்டிக்காக்க வேண்டுமென்றால் ஆண் குழந்தையே வேண்டுமென அப்பெண்ணின் கணவர் கூறி சித்ரவதை செய்துள்ளார். மீண்டும் பாதிக்கப்பட்ட பெண் கருவுற, அவரை மருத்துவருக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். தனக்கு குழந்தை வேண்டாமென மனைவி ஆசைப்படுவதாக பொய் கூறி  கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. 


Afghan Women : ’புதைக்கப்படும் டிகிரி சான்றிதழ்கள், ஐ.டி.கார்டுகள்!’ - ஆஃப்கான் பெண்களுக்கு நிகழ்வது என்ன?


பின்னர் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்பதற்காக  மருத்துவ ரீதியாக சிகிச்சையை தொடங்கியுள்ளார். இதற்காக தன்னுடைய மனைவியை பேங்காக் அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சையை கொடுத்துள்ளார் வழக்கறிஞரான கணவர். இதற்காக சில அறுவை சிசிச்சையும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு ஊசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. ஒன்று, இரண்டு அல்ல மொத்தமாக 1500 ஸ்டெராய்டுகள் செலுத்தப்பட்டுள்ளன. விருப்பமே இல்லாமல் அப்பெண்ணுக்கு கட்டாயமாக 8 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணுக்கு சட்ட ரீதியாக  கருக்கலைப்பு செய்தது தொடர்பாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்தது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 




ஆண் குழந்தை வேண்டியும், தேவையில்லை எனவும் பலரும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலையில் தலைமை மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் ரேணுகா என்பவரை கைது செய்தனர் . போலி மருத்துவர் ரேணுகா இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையிரனால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்ததும் தொடர்ந்து கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது. 


காபூல் வீழ்ந்த கதை: தலிபான்களின் தந்திரம் என்ன? ஒரு டைம்லைன்..!