Crime: மும்பையில் தொழிலதிபரின் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையில் பயங்கரம்:


மும்பையின் மலபார் ஹில் காவல் எல்லைக்குட்ட பகுதியில் வசிப்பவர் முகேஷ். இவரின் மனைவி ஜோதி (63). இவரது கணவர் முகேஷ்  நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.  இவரது வீட்டில் 19 வயதான கன்னையா குமார் என்பவர் வீட்டில் வேலை செய்து வந்திருந்தார்.


இந்த நிலையில், சம்பவத்தன்று நகைக் கடையில் இருந்து மாலை முகேஷ் வீட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது, கதவு திறக்கப்படவில்லை. இதனை அடுத்து, மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்துபோது, ஜோதி அவரது அறையில் சடலமாக கிடந்துள்ளார்.


இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோதியின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


முகேஷ் தனது வீட்டின் முன் அறையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி இருக்கிறார். இதனை ஆய்வு செய்த போலீசார், வீட்டில் வேலை பார்த்த கன்னையா குமார் படுக்கை அறையை நோக்கி சென்றது போன்றும், அவரின் அறைக்கு சென்று ஆடையை மாற்றிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய காட்சியும் பதிவாகி உள்ளது.


தொழிலதிபரின் மனைவியை கொன்று நபர்:


இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”ஜோதி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது  அறைக்கு திருடும் நோக்கில் கன்னையா சென்றிருக்கலாம். இதனை பார்த்த ஜோதியை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பார் கன்னையா. கன்னையாவை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.


ஜோதியை கொலை செய்ததோடு, நகையும்  திருடியதாக தெரிகிறது" என்று கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்த கன்னையாவை போலீசார் மும்பையில் கைது செய்தனர். இவர் பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.


இந்த கொலை 3 மணிக்கு நடத்ததாகவும், ஜோதியின் அறைக்கு சென்ற 15 நிமிடங்களில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வெளியேறி உள்ளதாகவும் கைதான கன்னையாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தெரிவித்தனர். ஜோதியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜோதி கழுத்தை நெரிக்கப்பட்ட உயிரிழந்தது உறுதியானது என்றும்  போலீசார் தெரிவித்தனர். 




மேலும் படிக்க


Mlc Kavitha: தெலங்கானவில் பரபரப்பு - முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை


Amitabh Bachchan : பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?