மும்பையில் 40 வயது மதிக்கத்தக்க கணவன், மனைவிக்கு எதிராக ஐஐடி மாணவர் ஒருவர் அளித்த புகார் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொலை செய்ய முயற்சித்ததாகவும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு வழக்கு குறித்து விரிவாக பேசிய போவாய் காவல்துறை மூத்த ஆய்வாளர் புதன் சாவந்த், "முப்பது வயதுள்ள புகார்தாரரும், குற்றம் சாட்டப்பட்டவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Grindr செயலி மூலம் அறிமுகமாகி சந்தித்துள்ளனர்.
இயற்கைக்கு மாறான பாலியல் உறவு:
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்டதாகவும், அவரைக் கொல்லக்கூடிய வகையில் அவரது கழுத்தைப் பிடித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
பாலியல் அடிமை:
தாந்த்ரீக முறையில் பாலியல் உறவில் ஈடுபடும் போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது கை மற்றும் கழுத்தை கட்டியதாகவும், அவரது உடலில் பல இடங்களில் சூடு வைத்ததாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியும் தன்னை பாலியல் அடிமையாக்கியதாக கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உயர் கல்வி கற்றவர்கள். நல்ல வேலையில் உள்ளனர்" என்றார்.
சமீபத்தில், நான்கு பெண்கள் சேர்ந்து ஆண் ஒருவரை கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்திது.
அந்த நபர் இரவு நான்கு பெண்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரவு முழுவதும், தன்னை பாலியல் ரீதியாக தன்புறுத்தி பாலியல் உறவில் இருக்க வைத்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர், நான்கு பெண்களும் அந்த நபரை சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிடியதாகக் கூறப்படுகிறது.
அந்த நபர் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களுக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட ஆண் தெரிவித்துள்ளார்.
லெதர் காம்ப்ளக்ஸ் சாலையில் காரில் வந்த நான்கு பெண்கள், தன்னை கடத்தியதாக அந்த நபர் கூறியிருந்தார். மேலும், அந்த நான்கு பெண்களும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். விலாசம் கேட்பது போல நடித்து பெண்கள் தன்னை கடத்தியதாகவும் கூறியிருந்தார்.
தனக்கு ஒரு வாசனை திரவியத்தை அவர்கள் கொடுத்ததாகவும், அது தன்னை மயக்கமடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, அவரை காரில் ஏற்றி கொண்டு தெரியாத இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த நான்கு பெண்களுக்கும் 22 முதல் 23 வயது வரை இருக்கலாம் என அவர் கூறியிருந்தார். சுயநினைவு திரும்பியபோது ஆடையின்றி கயிற்றால் கட்டப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.