Mumbai Murder :  கொலை செய்த சரஸ்வதியின் உடலை அப்புறப்படுத்த குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் கூகுள் உதவியை தேடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 


கொடூர கொலை


மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 56 லயதான மனோஜ் சானை என்பவர் லின் இன் பாட்னரான சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்து அவரது உடலை அப்புறப்படுத்த துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும் சில உறுப்புகளை சமையலறையில் குக்கரிலும் வேகவைத்து சமைத்து நாய்களுக்கு போட்டுள்ளார். மேலும், மற்ற உறுப்புகளை வறுத்தும், மிக்சியில் அறைத்தும் அதனை வாளிகளில் அடைத்துள்ளார்.


இதனால் துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் அறிந்ததும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானேவை கைது செய்துள்ளனர். பின்னர், உடல் உறுப்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கூகுளின் உதவியா?


இந்நிலையில், குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானைவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ”உயிரிழந்த சரஸ்வதியை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் இருந்துள்ளார். இதனால் கூகுளின் உதவியை நாடிய மனோஜ், அதில் உடலை எப்படி அப்புறப்படுத்துவது, இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் எப்படி தடுப்பது போன்றவற்றை கூகுளில் தேடியுள்ளதாக” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனோஜிடன் நடத்திய விசாரணையின்போது அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 


ஆன்லைனில் ஆர்டர்


மேலும், "உயிரிழந்த சரஸ்வதியின் உடலை வெட்டுவதற்கு ஆன்லைன் சில பொருட்களை வாங்கியுள்ளார். மரம் வெட்ட பயன்படுத்தப்படும் ரம்பம், துர்நாற்றம் வராமல் இருக்க சுமார் 5 பாட்டில் யூகலிப்டஸ் எண்ணெய், ரூம் ஃப்ரஸ்னர் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளதாக" போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்தில் கட்டிங் மெஷின்கள், எண்ணெய் பாட்டில்கள், ஸ்பூன்கள், வாளி, பித்தளை பானை மற்றும் சமையல் குக்கர் போன்ற பல்வேறு பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


தற்கொலையா? கொலையா?


தொடர் விசாரணையின்போது குற்றச்சாட்டப்பட்ட மனோஜ், சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டார் என்றும் நான் கொலை செய்யவில்லை என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் சுமார் 10 பத்து ஆண்டுகளாக இருப்பதால் சரஸ்வதி உயிரிழந்ததற்கு நான் தான் காரணம் என்று பலரும் கூறுவதாக எண்ணி, சரஸ்வதி உடலை துண்டு துண்டாக வெட்டினேன்” என்று கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், "தனக்கு எச்.ஐ.வி. நோய் பாதிக்கபட்டிருப்பதால் நாங்கள் இருவரும் ஒருபோதும் உடலுறவு கொண்டதே இல்லை என்றும் சரஸ்வதி எனது மனைவி” என்றும் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.  தற்போது வரை இந்த கொலைக்கான உரிய காரணம் என்ன? சரஸ்வதி, மனோஜ் சானேவுக்கும் என்ன உறவு என்பது பற்றி எந்த தகவலும் தெளிவாக வெளிவரவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.