மும்பையில் 42 வயதான பெண் ஒருவர் தன் நண்பர்களை பழிவாங்குவதற்காக தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மும்பை குர்லா பகுதியில் 42 வயதான பெண் ஒருவர் கடந்த மாதம் மூன்று பேர் கத்தி முனையில் தன்னை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது அந்தரங்க உறுப்புகளில் சிகரெட் துண்டுகளால் சூடு வைத்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 


அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், மூன்று பேரை சந்தேகப்பட்டு பாப்லு (எ) முகமது யாகூப் சித்திக் என்பவரை கைது செய்தது. மேலும், 40 நாட்களில் சிறையில் இருந்தார். மேலும் , இருவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். 


இந்தநிலையில், மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் நாங்கள் எத்தகைய குற்றத்தையும் செய்யவில்லை என தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கு அந்த பெண்ணின் மீது சந்தேகம் திரும்பியது. 


இதையடுத்து, அந்த பெண்ணை குர்லா பகுதியில் உள்ள ஜேஜே மற்றும் பாபா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குற்றம் நடந்ததாக கூறப்படும் அந்த பெண்ணின் வீட்டிலும் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட பொருட்களை புலன் ஆய்வுதுறையினர் சோதனையிட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் வந்தது. 


பொய் புகார்:


முதலில் ஜேஜே மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ அந்த பெண் எந்தவொரு நபராலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், அந்தரங்க உறுப்பில் இருந்த சூடுப்பட்ட காயங்கள் அனைத்தும் அந்த பெண்ணே ஏற்படுத்தி கொண்டதாக இருக்கிறது” என தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரின் பாபா மருத்துவமனையை அனுப்பிய அறிக்கையையும் ஆராய்ந்தபோது, அந்த முடிவுகளும் அந்த பெண்ணிற்கு எதிராகவே வந்திருந்தன. 


தொடர்ந்து, குர்லா காவல் நிலைய ஆதாரங்களின் அடிப்படையில், தடயவியல் அறிக்கைகள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டது. 


இதனால் குர்லா காவல்துறையினரின் பார்வை அந்த 42 வயதான பெண்ணின் பக்கம் திரும்பியது. அந்த பெண்ணை காவல்துறை அழைத்து விசாரணை நடத்தியத்தில், அந்த பெண் கொடுத்தது பெண் புகார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் மூன்று பேரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தோம். அப்போது எங்களுக்குள் போட்டி ஏற்பட்டு பிரச்சனை ஆனது. இதனால், அவர்களை பழிவாங்க முடிவுசெய்து இப்படியான புகாரை அளித்ததாக அந்த பெண் தெரிவித்தார். 


பொய்யாக அந்த பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சித்திக் என்ற நபர் கடந்த 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.