பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி போதை பொருள் தடுப்பு அலுவலர்களால் கோவாவுக்கு செல்லும் சொகுசு கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானுடன் 20 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். 


அதனைத் தொடர்ந்து ஆர்யன் கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணை கேட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து அவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார்.


இந்த மேல்முறையீடு 26ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் ஆர்யன் கான் எந்த உணவையும் சாப்பிடுவதில்லை எனவும், அவர் தீவிர மன உளைச்சலில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


மேலும் ஷாருக் கானும், அவரது மனைவி கௌரி கானும் ஆர்யனுடன் சில வாரங்களுக்கு முன்பு வீடியோ காலில் பேசியிருந்தனர்.


இந்நிலையில், சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் இன்று சந்தித்தார். மூன்றாம் தேதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு இன்றுதான் ஷாருக் கான் அவரை முதல்முறை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஆர்யன் கானுக்கு ஷாருக் தைரியம் அளித்ததாகவும், ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.  


முன்னதாக கரோனா பரவல் காரணமாக சிறையில் இருப்பவர்களை சந்திப்பதற்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்த சூழலில் நேற்று அந்தத் தடையை அம்மாநில அரசு தளர்த்தியது.


அதன்படி சிறையில் இருப்பவர்களை இரண்டு பேர் சந்தித்து பேச மகாராஷ்டிர அரசு அனுமதியளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் மும்பையில் இருக்கும் நடிகர் ஷாருக் கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் சென்று சோதனை நடத்தினர். அதேபோல் நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் சோதனை நடந்துவருகிறது.


இன்று காலை மகனை ஷாருக் சந்தித்த நிலையில் தற்போது அவரது வீட்டில் நடந்துவரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க:


Tuticorin Crime: ஒரு தலைக்காதல்: அப்பாவி புதுமாப்பிள்ளை தலை துண்டித்து கொலை... காதலியை பழிவாங்க வெறிச்செயல்!


Eswaran Exclusive Interview Video: ‛கட்சியில் வாரிசு வருவது தவறல்ல... வாரிசு தான் கட்சியை வழிநடத்த முடியும் என்பது தவறு’ -ஈஸ்வரனின் ஈட்டி பதில்கள்!


Shah Rukh Khan | மகன் விவகாரத்தால் இமேஜ் குறைந்த ஷாருக்! தொழில் நஷ்டத்தில் ஷாருக்கான் டூப்!