மும்பையில் ஓட்டல் மற்றும் பார் ஒருங்கிணைந்த பப்பில் பல பெண்கள் ஒரு அறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை போலீஸார் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 19 பேர் வாடிக்கையாளர்கள் எஞ்சியவர்கள் ஓட்டலின் மேலாளர், உணவக ஊழியர்கள் உள்ளிடோர் ஆவர். இவர்களுடன் பாரில் நடனமாடிக் கொண்டிருந்த 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர். பாரில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கேவிட்டியில் பெண்களை மறைத்து வைத்துள்ளனர். கண்கட்டுவித்தை போல் போலீஸாரிடமிருந்து தப்பிக்க அவர்கள் இதனை செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இபிகோ 308 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையும் நடன பார்களும்
மும்பை பெருநகரம், பெரும் பணக்காரர்களின் நகரமும் கூட. தாராவி எனப்படும் ஆசியாவின் மிகப்பெரிய சேரி இருக்கும் அதே மும்பையில் தான் அண்டில்லா ஹவுஸ் என்ற அம்பானியின் சொகுசு பங்களாவும் உள்ளது. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் தொழில் நகரமும் அதுதான் பாலியல் தொழிலுக்கான பெயர் பெற்ற காமத்திபுரா இருக்கும் இடமும் அதுதான். இந்நிலையில் தான் மும்பையில் டான்ஸ் பாரில் நூதன அறையில் பெண்களை அடைத்து வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.
2016ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநில சட்டப்படி பார்களில் பெண்கள் நடனமாடுவது தடை செய்யப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து பார் ஓனர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து 2019ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் பார்களில் நடனமாட அனுமதி உள்ளது. அங்கு பாலியல் தொழிலும் நடைபெறுகிறது. கேப்ரே நடனம் ஆடும் ஸ்ட்ரிப்பர்கள்மீது சில்லரைகளை வீசுவர் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள். அவையெல்லாம் அங்கு சட்டபூர்வமாகவே நடைபெறுகிறது. ஆனால் இங்கு நடன பாருக்கு மட்டும் தான் அனுமதி. இருப்பினும் எல்லா கூத்துக்களும் சட்டவிரோதமாக நடக்கும் பார்களும் உள்ளன.
இந்த பார்கள் இயங்க செல்வந்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற பார்களை மும்பையில் நடத்த அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்தனர் இந்திய பார் ஓனர்கள். மகாராஷ்ட்ரா 2016 மாநில சட்டப்படி பார்களில் பெண்கள் நடனமாடுவது தடை செய்யப்பட்டு இருந்தது. 2019ல் தடை நீக்கப்பட்டது.
அதன்படி பார்களில் நடனம் ஆட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சில்லரைகளைத் பெண்கள் மீது வீசுதல், சில்மிஷங்கள் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் பாரில் பணிபுரியும் பெண்கள் நலன் கருதி அங்கு சிசிடிவி காமிரா வைக்க அரசுதரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது வாடிக்கையாளர்களின் பிரைவஸியை பாதிக்கும் செயல் என பார் ஓனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடனங்களின்போது மது அருந்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. மாலை 6 முதல் 11.30 மணிவரை மது சப்ளை செய்யலாம். இதுபோன்ற நடன பார்கள் கல்விக்கூடங்கள் மற்றும் கோவில்களில் இருந்து தள்ளியே கட்டப்பட வேண்டும். இவை தவிர நல்ல பழக்கவழக்கங்கள் உடையவர்களுக்கு மட்டுமே நடன பார் அமைக்க உரிமம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் நடத்தை சரி இல்லை என்றால் உரிமம் ரத்தாகலாம்.
இவையெல்லாம் பேப்பரில் உள்ள சட்டஙகள் தான் நடைமுறையில் பார்த்தால் நிறைய சர்ச்சைகள் உள்ளன. பாலியல் தொழில், ஆள் கடத்தல் என பல்வேறு துயரங்களும் நிகழ்கின்றன.