தனது வருங்கால கணவரை மனரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக 25 வயது பெண்ணை மும்பை கண்டிவிலி போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜூலை மாதம், 58 வயதான லக்ஷ்மண் கோகரே என்பவர் தனது மகன் அங்கித் கோகரே சார்கோப்பில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார். அங்கித் ஐடி பட்டதாரி என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் சார்கோப் காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. லக்ஷ்மண் அங்கித்தை அந்தேரி மேற்கில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டில், அங்கித்தின் தந்தை தனது மகன் உறவினரின் மகளான பிரகதி ஜோரைக் காதலிப்பதைக் கண்டுபிடித்தார். இருப்பினும், அவர் அந்த உறவை ஏற்கவில்லை. லக்ஷ்மன், அங்கித்தை ஜோரிடம் இருந்து விலகி இருக்கச் சொன்னார். இதனால் கோபமடைந்த ஜோர், அங்கித்தை ஃபோன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் சித்தரவதை செய்யத் தொடங்கினார். தன்னைத் திருமணம் செய்வதிலிருந்து பின்வாங்கினால் அவர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டினார்.
திருமணத்திற்கு சம்மதிக்குமாறு மகன் கோரியபோது, தந்தை சம்மதித்து அவர்களுக்கு வீடு வாங்க முயன்றார். இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, அங்கித் தனது வேலையை இழந்தார். மேலும் லக்ஷ்மனும் புதிய வீட்டிற்கு நிதி திரட்ட முடியவில்லை. வீட்டுக்கான பணத்தை தன்னிடம் தருமாறு கேட்டு ஜோர் மீண்டும் அங்கித்தை சித்திரவதை செய்யத் தொடங்கினார். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அங்கித் மன உளைச்சலுக்கு ஆளானார் என்று விசாரணையில் தெரிய வந்தது. கடந்த ஜூலை மாதம், அங்கித் தனது பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சார்கோப் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கித் ஜோரால் துன்புறுத்தப்படுவதாக எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை கண்டுபிடித்த லக்ஷ்மண், “நான் அங்கித்தின் வாட்ஸ்அப் செய்திகளைப் பார்த்தேன், ஜோரின் தவறான பேச்சு, அவர் எனது மகனை துன்புறுத்திய தொலைபேசி பதிவுகளையும் கண்டேன்” என்று லக்ஷ்மன் கூறினார்.
இந்த வழக்கு குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் லக்ஷ்மண்அளித்த புகாரை சரிபார்த்து, நவம்பர் 3ஆம் தேதி ஜோரைக் கைது செய்தோம். அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்” என்று கூறினார். ஜோர் மீது ஐபிசி பிரிவுகள் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)
State suicide prevention helpline – 104 (24 hours),
iCall Pychosocial helpline – 022-25521111
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்