கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் மகபூப்பாஷா. இவர் ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகின்றார். இவருடைய மனைவி நூர்ஜான் வயது (38). இவர்களின் மகள் மோசின்ஜான்(17). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இந்த சிறுமி, கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று படித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் அங்கு வகுப்பிற்கு வந்த மோசின்ஜான், என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மகபூப்பாஷா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மகள் மற்றும் மனைவியிடம் இது குறித்து விசாரித்தார். மேலும் காதல் எல்லாம் இந்த வயதில் வேண்டாம் என்று அவர் மகளிடம் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகள் காதல் விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.  இதில் ஆத்திரம் அடைந்த மகபூப்பாஷா, மனைவி மற்றும் மகளிடம் கோபித்துக்கொண்டு பேரண்டபள்ளியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைக்கு தூங்க சென்று விட்டார்.
 


 




 


இந்த நிலையில் வீட்டில் இருந்த நூர்ஜானும், அவருடைய மகள் மோசின்ஜானும் மனம் உடைந்து சோகமாக காணப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் நள்ளிரவில் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதனிடையே  நீண்ட நேரமாகியும் அவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது தாயும், மகளும் தூக்குபோட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து மகபூப்பாஷாவுக்கு தகவல் தெரிவித்தனர்.அதனையடுத்து அங்கு விரைந்து வந்த மகபூப்பாஷா, தனது மனைவி மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து அவர் ஓசூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். 


 


 




 


போலீஸ் விசாரணைக்கு எதிராக ராஜேந்திரபாலாஜியின் சகோதரி தொடந்த வழக்கு ஒத்திவைப்பு


இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய தாய், மகள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்-மகள் இருவரும் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் ஓசூர் அண்ணாநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.