கர்நாடகா மாநிலத்தில் இஎம்ஐ கட்டுவது தொடர்பான புகாரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 மாதமாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர். 

Continues below advertisement

கடந்த ஜூலை மாதம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுக்காவில் உள்ள கௌஜலகி கிராமத்தில்  அண்ணப்பூர்ணா என்ற பெண் திடீரென காணாமல் போனார். அவரது கணவர் போலீசார் புகாரளிக்க காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். கிட்டதட்ட 2 மாதங்கள் விசாரணை நடந்த நிலையில் அன்னபூர்ணா காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோகாக் தாலுக்காவின் சிங்கலபுரா கிராமத்தைச் சேர்ந்த திலீப் கடகாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்குள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் அன்னபூர்ணா உடலானது கண்டெடுக்கப்பட்டது. 

Continues below advertisement

கொலை நடந்தது எப்படி?

அன்னபூர்ணா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அன்னபூர்ணா கணவருக்கு 2 ஏக்கர் நிலம் இருந்ததால் அதனை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்படியான நிலையில் தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு கட்டும் வேலைக்காக கௌஜாலா சென்றிருந்த திலீப்புக்கு அன்னபூர்ணா அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் பெரிதாக பேசிக் கொள்ளாதவர்கள் பின் செல்போன் எண்ணை பரிமாறி மணிக்கணக்கில் உரையாடியுள்ளனர். அவர்களுக்கிடையே நாளடைவில் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

திலீப்பிற்கும் ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்த நிலையில் அவர் தன்  குடும்பத்தை அன்னபூர்ணாவுடனான உறவுக்காக கைவிட்டார். இந்த நிலையில் தான் கடந்த சில மாதம் முன்பு, இஎம்ஐ மூலம் திலீப் ஒரு பைக் வாங்கினார். அதற்கு மாதத்தவணை செலுத்த பணம் இல்லாமல் தவித்துள்ளார். அன்னபூர்ணாவிடம் கேட்டதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். 

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த திலீப், ஜூலை 23ம் தேதி வெளியூருக்கு வரவழைத்து கரும்பு தோட்டத்தில் வைத்து பேசி கழுத்தை நெறித்து கொன்று அன்னபூர்ணா அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு உடலை புதைத்துள்ளார். இதனிடையே காணாமல் போன வழக்கை விசாரித்த போலீசார், கடைசியாக அன்னபூர்ணா போனில் யாரை அழைத்தார் என பார்த்தனர். 

மேலும் அந்த போனின் ஐஎம்இஐ நம்பரைக் கொண்டு சோதனைச் செய்ததில் அதில் மற்றொரு சிம் இருந்துள்ளது. அந்த எண்ணிற்கு அழைத்தால் மத்தியப்பிரதேசத்தில் இருந்து பேசிய ஒருவர் செல்போனை விற்றுவிட்டதாக கூறியுள்ளார். அது யார் என விசாரிக்கையில் திலீப் பெயர் அடிபட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திலீப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.