குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது சூரத், மிகவும பிரபலமான இந்த நகரத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவர்களது வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிந்த ஒரு பெண்ணும், அவருடன் ஒரு இளைஞரும் வந்துள்ளனர்.
அப்போது, அந்த இளைஞன் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், அந்த இளைஞனும், அந்த பெண்ணும் இணைந்து அந்த சிறுமியிடம் இந்த விவகாரத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளனர். வெளியில் கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர், ஒரு வாரம் கடந்த பிறகு அந்த இளைஞனுக்கு உடந்தையாக இருந்த பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவ்வாறு வராவிட்டால் சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிறுமியை அந்த பெண் அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுடன் இன்னொரு இளைஞனும் இருந்துள்ளான்.
இவர்கள் இருவரும் இணைந்து சிறுமிக்கு டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்ததுள்ளனர். பின்னர், மயக்க நிலைக்கு சென்ற சிறுமியை இருவரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் தனது தாயுடன் சிறுமி மத்திய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கே திரும்பியுள்ளார். அங்கு சிறுமியின் நடவடிக்கைகளில் பெரியளவில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர்களும், உறவினர்களும் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சூரத் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் மற்றும் உடந்தையாக இருந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்