10 சடலங்கள் நிரப்பப்பட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் வாகனம் ஸகாடிகஸ் மாநில கவர்னர் அலுவலகத்திற்கு வெளியே விடப்பட்டதை அடுத்து, சந்தேகத்திற்குறிய இரு நபர்களை மெக்சிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்திய மாநிலமான ஸகாடிகஸ் இல் உள்ள கவர்னர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தில் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சமீபத்த்தில் சில ஆண்டுகளாக கொடூரமான சினாலோவா மற்றும் ஜாலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல்களுக்கு இடையே நடைபெற்றுவரும் போரால் மாநிலம் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது. இரண்டு இயக்கங்களும் அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழிகளைக் கட்டுப்படுத்த போராடுவதாக நம்பப்படுகிறது.
மத்திய பொதுப் பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, ஒரு நபர் ஸ்போர்ட்ஸ் டிரக்கை வளாகத்திற்குள் ஓட்டிச் சென்றார், பின்னர் ட்ரக்கை விட்டுவிட்டு ஒரு சந்து வழியாக நடந்து சென்றார். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஓட்டி வந்ததாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஸகாடிகஸ் மாநில கவர்னர் டேவிட் மான்ரியல், அந்த சடலங்கள் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உடல்கள் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறினார். "அவர்கள் அந்த உடல்களை கவர்னர் மாளிகைக்கு முன்னால் விட்டுச் செல்ல வந்தார்கள்," என்று அவர் ஒரு வீடியோவில் கூறினார், மாநிலத் தலைநகரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடத்தில் உள்ள தனது அலுவலகங்களைக் குறிப்பிடுகிறார், இது ஸகாடிகஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பிளாசா டி அர்மாஸ் சதுக்கம் ஒரு கிறிஸ்துமஸ் மரம் மற்றும் புதுவருட அலங்காரங்களுடன் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
குற்றவாளிகள் என்று கூறப்படும் நபர்கள் அடையாளம் காணப்படாமல் கைது செய்யப்பட்டதாக ஆளுநர் பின்னர் ட்வீட் செய்தார். ஸகாடிகஸில் பாதுகாப்பு சவாலை நிரூபித்துள்ளதாகவும், வன்முறையைச் சமாளிப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். "மெல்ல மெல்ல அமைதியை மீட்டெடுப்போம். நாம் இருப்பது ஒரு சபிக்கப்பட்ட சூழல்" என்று அவர் கூறினார். போரிடும் இரு கும்பல்கள் போதை கட்டுப்பாட்டிற்காக சண்டையிடுவதால், ஸகாடிகஸ் மாநிலம் மிகவும் வன்முறை பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. மாநிலத்தில் 2021 இல் 1,050 கொலைகள் பதிவு செய்யப்பட்டன, 2020 ஐ விட 260 கொலைகள் அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் கொலைகளை கணிசமாகக் குறைக்க மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் போராடினார். 2021 இன் முதல் 11 மாதங்களில் 31,615 கொலைகள் பதிவாகியுள்ளன. அவ்வளவு போராடியும் 2020 இல் 32,814 இல் இருந்து வெறும் 3.6% சரிவு மட்டுமே கண்டது.