Crime : மெக்சிகோ நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையைச் சாப்பிட்ட பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கொடூர கணவர்
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் 32 வயதான அல்வாரோ. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மரியா மான்செராட் (38). கடந்தாண்டு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மரியா மான்செராட் இதற்கு முன்பு வேறு ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு 5 குழந்தைகள் இருந்துள்ளன. அப்போது தான், மரியாவுக்கும் அல்வாரோவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர், இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
இதனை அடுத்து, இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அல்வாரோ தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இப்படியே கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மாதம் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி இவர் சாத்தான் வழிப்பாடும் செய்து வந்துள்ளார்.
மனைவி கொலை
இப்படி இருக்கும் நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவத்தை செய்துள்ளார் அல்வாரோ. அதாவது, ஜூன் 29ஆம் தேதி போதை தலைக்கேறி, மனைவியை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர், சில பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளார். சில பாகங்களை மலையில் வீசிய அவர், வேறு சில பாகங்களை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். அத்துடன் நிற்காமல் தனது மனைவியை மூளையை வெளியே எடுத்து, அதை டகோ என்ற உணவில் வைத்து சாப்பிட்டுள்ளார். மேலும், அவரது மண்டை ஓட்டை சிகரெட் தூசிகளைப் போடும் ஆஷ் ட்ரேவாக பயன்படுத்தியுள்ளார்.
என்ன காரணம்
பின்னர், அடுத்த நாள் போலீசிடம் சரண் அடைந்துள்ளார். அப்போது, போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ”தான் வழிபடும் டெவில் தான் இந்த இந்த கொலையைச் செய்ய தனக்கு கட்டளை போட்டதாகவும், அதனால் தான் மவைவியை கொன்றதாகவும் தெரிவித்தார். மேலும், போதையில் இதைச் செய்துள்ளதாகவும், போதை தெளிந்ததும் தான் எவ்வளவு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளோம் என்பதை நான் உணர்ந்ததாக” அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க