சென்னை பேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருட்டு போவதாக போரூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போரூர் காவல் உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆஓன், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன்நாதன், காவலர் லிங்கநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமான தேடினர். பைக்குகள் காணாமல் போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, டிப்டாப் ஆசாமி ஒருவர், பைக்கை நைசாக திருடும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில் பழைய குற்றவாளி ரமேஷ் என்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மெக்கானிக்கல் இஞ்சினியர்
இது குறித்து போலீஇசார் கூறுகையில், சென்னை அயனாவரத்தை சேஎர்ந்த ரமேஷ், மெக்கானிக்கல் இஞ்சினியர். வாகனங்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் நிறுவனத்திலும், வாகனங்களை பறிமுதல் செய்யும் நிறுவனத்திலும் வேலை செய்துவந்துள்ளார். அப்போதில் இருந்து நூதன முறையில் வாகனங்களை திருடி விற்பனை செய்வது குறித்து கற்றுக்கொண்டார். பின்னர் வாகன திருட்டையே முழுநேர தொழிலாகவே செய்துவந்துள்ளார். இவர் மீது கடந்த 2019ஆம் ஆஅண்டு வில்லிவாக்கத்தில் திருட்டு வழக்கு பதிவாகி சிறைக்கு சென்று வந்தார். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக நூதன முறையில் வாகனங்களை திருடி வந்துள்ளார்.
பக்காவாக வாகனத்தை மாற்றுவதில் கில்லாடி
அதற்காக பயன்படுத்தவே முடியாத பழைய வாகனங்களை விலைக்கு வாங்குவார். அதை காயலான் கடையில் போட்டுவிட்டு அந்த வாகனங்களின் ஆர்.சி.புத்தகத்தை வைத்துக்கொள்வார். அதே மாதிரி வாகனங்களை திருடி இந்த ஆர்.சி.புத்தகத்தில் உள்ள நம்பர், எஞ்சின் நம்பரையும் மாற்றி விற்பனை செய்து வந்தார். இதற்கு இவரது நண்பரான கோயம்பேட்டை சேர்ந்த செல்வம் என்பவர் உடந்தையாக இருந்து திருட்டு வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் லோன் கட்ட முடியாததால் பறிம்குதல் செய்யப்பட்ட வாகனம் என்பதால் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்ததாக கூறி விற்று விடுவார்களாம். திருடு போன வாகனத்தின் உரிமையாளரே பார்த்தால் கூட அந்த வாகனம் தன்னுடையதுதான் என்று தெரியாத அளவுக்கு பக்காவாக வாகனத்தையே மாற்றிவிடுவது இவர்களது பழக்கம்.
பெண்களுடன் உல்லாசம்
திருட்டு வாகனங்களை விற்று வரும் பணத்தில் ரமேஷ் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இது வரை அவரிடம் இருந்து 42 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரமேஷையும் அவருக்கு உடநதையாக இருந்த செல்வம் என்பவரையும் கைது செய்தனர். ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.