சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த நித்யஸ்ரீ என்ற மாணவி கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10வது மாடியில் வசித்து வந்துள்ளார். இதனிடையே இன்றைய தினம் தனது வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நித்யஸ்ரீ உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.