மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  கோவில்பத்து  பகுதியில்  காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக சிறப்பு தனிப்படை காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து  கோவில் பத்து பகுதிகயில் தனிப்பட்ட காவல்துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பேர் காரில் சென்றுள்ளார். உடனடியாக அந்த காரை நிறுத்தி தனிப்பட்ட காவல்துறையினர் சோதனை செய்தனர். 

சோதனையில் காரில் உள்ளே  ஆறு சாக்கு மூட்டைகள் இருந்துள்ளது, உடனடியாக அதனை பிரித்து பார்த்தபோது சாக்கு மூட்டைகளில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,250 சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, காரில் வந்தவர்களிடம் சிறப்பு தனிப்பட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் அடுத்துள்ள செல்லூரை சேர்ந்த 39 வயதான தமிழ் மற்றும் திருத்துறைப்பூண்டி இடும்பாவனம், மங்களபுரத்தை சேர்ந்த 29 வயதான சூரியமூர்த்தி என்பதும், இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து சூரியமூர்த்திமற்றும் தமிழ் ஆகிய இரண்டு பேரையும் தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுத்திருத்தது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. 

குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராயத்தையும் நாடி வந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மாவட்டத்தில் ஏராளமான கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தும் கள்ளச் சாராய விற்பனை மூலம் அதிக வருவாய் வருவதை உணர்ந்த பலர் பணத்தின் மீது உள்ள பற்றில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்  மாவட்ட முழுவதும் பல்வேறு கள்ளச்சாராய ஒழிப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.