தாய் தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டிவிட்டு சென்ற மகனின் செயல் மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் வசித்து வருபவர் 70 வயதான மணி மற்றும் அவரது மனைவி 60 வயதான மீரா தம்பதியினர். இவர்கள் இவருக்கு கார்த்தி, ராம்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் கார்த்தி வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக 18 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி வேலை செய்து சம்பாதித்து பெற்றோருக்கு அனுப்பி வைத்த பணத்தை கொண்டு கார்த்தியின் பெற்றோர் அவர்களது இடத்தில் மாடி வீடு கட்டி உள்ளார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கார்த்திக்கு கடந்த 2017-ம் ஆண்டும் ராம்குமாருக்கு 2019 -ஆம் ஆண்டும் பெற்றோர் திருமணம் செய்து வைத்து ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். மேலும் இளைய மகன் ராம்குமாருக்கு புதிதாக இடம் வாங்கி வேறு ஒரு இடத்தில் வீடு கட்டி வருகின்றனர். இந்த சூழலில் ராம்குமார் தனக்கு பெற்றோர் வசிக்கும் வீடு தான் வேண்டுமென்றும் புதிதாக கட்டப்படும் வீடு வேண்டாம் என பிரச்னை செய்துள்ளார். இதன் காரணமாக மூத்த மகன் கார்த்தி அவரது மாமியார் வீட்டிற்கும், பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் மூத்த மகன் கார்த்தி உதவியுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து கூலி வேலை செய்து வரும் கார்த்தியால் வாடகை செலுத்த முடியாத நிலை இருந்ததால், பெற்றோர் தங்களது சொந்த வீடான ராம்குமார் வசிக்கும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். ஆனால் ராம்குமார், பெற்றோரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டை பூட்டி அவர்களை வெளியில் தள்ளி உள்ளார். இதனை அறிந்த அவரது அண்ணன் கார்த்தி, அந்த வீட்டிற்கு வந்து உள்ளார். அவரையும் வீட்டிற்குள் உள்ளே வரவிடாமல் விரட்டி வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இதனால் பெற்றோர் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீரா ஏற்கனவே புகார் மனு அளித்திருந்த நிலையில், இன்று பெற்றோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பெற்றெடுத்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியே தள்ளி போட்டி சென்ற மகனின் செயலுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்