மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த 58 வயதான சோமசுந்தரம் என்ற விவசாயி அவரது மனைவி 55 வயதான அருள்செல்வி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்த சூழலில் வீட்டின் கதவை மூடிவிட்டு தாழ்ப்பாள் இடமால் இரவு தூங்க சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மற்ற அறைகளில் உறங்கியுள்ளனர். அருள்செல்வி மட்டும் வீட்டின் ஹால் பகுதியில் ஆழ்ந்த தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் 12.50 மணியளவில் வீட்டில் வாசல் கதவு வழியாக அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த அருள்செல்வியின் கழுத்தில் இருந்த தாலி, தாலி குண்டு, தாலி ஜெயின் உள்ளிட்ட 6 சவரன் தங்க நகையை அருத்து சென்றுள்ளனர்.
அருள்செல்வியின் சத்தம் போட்ட உடனே வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடியுள்ளனர். இதனை அடுத்து பெரம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் மற்றும் குத்தாலம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாலி சங்கிலி அருள்செல்வியின் கழுத்தில் அறுத்ததில் அவருக்கு லேசானகாயம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்தில் இருந்த ஜெயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்