மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டில் வசிப்பவர் ரெங்கநாதன்(36). ஹோமியோபதி மருத்துவரான இவர், தனது மனைவி இந்துமதியை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பி அவர் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

Continues below advertisement



திருட்டு நடைபெற்ற ஊரின் பெயர் பலகை


பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவில் உடைத்து அதிலிருந்த 11 பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது. 



மணல்மேடு காவல் நிலையம்


இதுகுறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.