மும்பையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பையில் உருது வகுப்புகளை நடத்தி வந்த மௌலவி என அழைக்கப்படும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுள் ஒருவரான 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்தன்று அந்த 8 வயது பெண் குழந்தையை , அவரது சித்தி ( மாற்றாந்தாய்) மதிய வகுப்பிற்கு தயாராகுமாறு கூறியிருக்கிறார். அந்த பெண் பயந்து அழுதுக்கொண்டே , நான் வகுப்பிற்கு செல்லமாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். இது குறித்து அந்த குழந்தையின் சித்தி விசாரித்த பொழுதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவத்தை அந்த குழந்தை தெரிவித்திருக்கிறார். உருது கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் மௌலவி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் , அதனால் தனக்கு ஏற்பட்ட வலி இருப்பதையும் குழந்தை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.அதிர்ந்து போன அப்பெண்ணின் சித்தி , காவல்துறையில் அந்த நபரின் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் அந்த உருது ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது உறுதியான நிலையில் , 35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் என்ற போர்வையில் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட மௌலவியின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தையும் , ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , அவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிவது அவசியம்.