விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இ.சி.ஆர் சாலையில் ரங்கநாதபுரம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தலைமை காவலர் அருணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி அதிவேகமாக வந்த  ஒரு மோட்டார் பைக் வந்து கொண்டிருந்தது சந்தேகமடைந்த போலீசார் அந்த மோட்டார் பைக்கை மரித்து மோட்டார் பைக்கின் பின்பகுதியில் அமர்ந்து வந்த ஒரு பெண்ணின் கையில் இருந்த பைகளை சோதனை செய்துள்ளனர்.


அப்போது அவர் வைத்திருந்த இரண்டு பைகளிலும் 150 குவாட்டர் மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த மோட்டார் பைக்கை ஓட்டி வந்த நபர் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வயது (45) என்றும் மோட்டார் பைக்கின் பின் அமர்ந்து வந்த பெண் மரக்காணம் அருகே சிறுவாடி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி வயது (39) எனவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீசார் இவர்களை கைது செய்தனர் மேலும் இவர்கள் எடுத்து வந்த மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.


 




புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.