மங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் கோஸ்சேன் அரசு மருத்துவமனை மீது போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னுடைய மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவே முதலில் என்னிடம் கூறினர். ஆனால் என் கையில் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தனர். குழந்தை மாறிவிட்டது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்த புகார் முஸ்தபா என்பவரால் கொடுக்கப்பட்டது.  


குந்தப்பூரைச் சேர்ந்த அவருடைய மனைவியான அம்ரீனுக்கு அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனை ஊழியர்கள்  பெண் குழந்தை பிறந்தது என தெரிவித்துள்ளனர்.  ஆனால் குழந்தைக்கு எடை குறைவாக இருந்ததால் மேற்கொண்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அக்டோபர் 14ம் தேதி குழந்தையை முஸ்தபா கையில் கொடுத்துள்ளனர். ஆனால் ஆண் குழந்தையை கையில் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் முஸ்தபா. 


சிகரெட்டில் இருந்து படுக்கையில் பரவிய தீ.. புகை மூண்டதால் மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழப்பு..




இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசிய முஸ்தபா, குழந்தை பிறந்தபோது பெண் குழந்தை எனக் கூறினர். பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கையில் கொடுக்கும் போது ஆண் குழந்தையை கொடுத்தனர்.  என்றார்.


முஸ்தபாவின் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. குழந்தை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், குழந்தை பிறந்த போது male (ஆண்) எனக் குறிப்பிடாமல் female (பெண்) எனக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் ஏற்பட்ட குழப்பமாக இது இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 


துப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற குழந்தை... கைதானார் தந்தை!


இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய மங்களூரு போலீஸ் கமிஷ்னர் சாஷி குமார், '' குழந்தை பிறந்த டாக்குமெண்ட்ஸ் சரிபார்க்கப்படும். டிஎன்ஏ டெஸ்ட் வரை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை சரிபார்த்தே இந்த வழக்கில் தீர்வு காணப்படும். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


முஸ்தபாவின் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண