வடகிழக்கு டெல்லியில் கடந்த வியாழன் இரவு 20 வயது இளைஞன் ஒருவன் கத்தியால் வெட்டப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் காவலில் உள்ள 22 வயதான சோஹைப், சாலையில் கிடந்த காசிமை பலமுறை தான் வைத்திருந்த கத்தியால் வெட்டுகிறார். தற்போது காயமடைந்த காசிம், முன்னதாக ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உயர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் வலியால் சாலையில் துடித்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த சில பெண்கள் அந்த நபரை காப்பாற்றுமாறு கதறினர். அந்த சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றதும், அக்கம்பக்கத்திபர் குவிந்து அந்நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து டெல்லி கூடுதல் டிசிபி சந்தியா சுவாமி தெரிவிக்கையில், “ கடந்த வியாழக்கிழமை இரவு 10.40 மணியளவில் நந்த் நாக்ரி பகுதி காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. அதில், அவரின் சகோதரரால் கத்தியால் குத்தப்பட்ட காசிம் என்ற நபர் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர் கண்காணிப்பில் உள்ளார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் 307 IPC கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்.” என்றார்.
எதனால் இந்த கொலைவெறி தாக்குதல்..?
தாக்குதல் நடத்திய நபர் 22 வயதான சோஹைல் என்றும், தாக்குதலுக்குள்ளான நபர் 20 வயதான காசிம் என்றும் தெரியவந்துள்ளது. முன் பகை காரணமாக தாக்குதல் நடந்துள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோஹாப் மற்றும் காசிமுக்கு இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காசிம், சோஹைப் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக சோஹைப் கண்ணில் பாதிப்பும், மூச்சு விடுதல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சோஹைப், காசிம் மீது வெறுப்பை வளர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு நீண்ட நாள்களுக்கு பிறகு காசிமை சோஹைப்பை தாக்கியுள்ளார். மேலும், தடுக்க வந்தவர்களை யாரும் இதில் தலையிடக்கூடாது என கத்தியால் மிரட்டவும் செய்தார்.
மருத்துவமனையின் மெடிகோ லீகல் கேஸ் (எம்எல்சி) அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் இடது கை, இடது கால் மற்றும் வலது காலில் கத்தியால் கீறப்பட்ட காயங்கள் மற்றும் அவரது முகத்தின் வலது பக்கத்தில் சில கீறல்களுக்கு உள்ளன. பாதிக்கப்பட்ட நபர் இன்னும் மயக்கத்தில் உள்ளதாக அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.