கொல்கத்தாவில் பரபரப்பான சாலையில் 21 வயது மாணவியை ஆட்டோவில் சென்ற நபர் சில்மிஷம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 வயது மாணவி ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தார். இரவு 9.30 மணி முதல் 9.45 மணி வரை பெஹாலா டிராம் டிப்போவில், அந்தப் பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெண்ணின் அருகில் அமந்திருந்த மஜி என்ற நபர், பெண்ணை பார்த்து கண்ணடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தார். உடனே அப்பெண் அந்நபரிடம் விலகி வேறொரு இடத்தில் அமர்ந்தார். இதனைத்தொடர்ந்து, பெஹாலா டிராம் டிப்போவில் வாகனத்தில் இருந்து இருவரும் இறங்கினார்கள்.


Madhya Pradesh Crime: குளித்துவிட்டு டவல் கேட்ட கணவன்... தாமதமாக வந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!


பின்னர், அந்த நபர் அப்பெண்ணைப் பின்தொடரத் தொடங்கியதாகவும், திடீரென்று அந்த நபர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. உடனே, அந்தப் பெண் குரல் எழுப்பி கூச்சலிட்ட பின் அந்த இடத்திலிருந்து அந்த நபர் தப்பிச் செல்வதற்குள், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படத்தனர். இதனைதொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.




இந்த வழக்கின் விசாரணை அதிகாரி கூறுகையில், "இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்று பாதிக்கப்பட்ட பெண் எங்களிடம் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்ற பயணிகளிடம் இதுபோன்று நடந்து கொண்டாரா? என்பதை அவரிடமிருந்தும் ஆட்டோ ஓட்டுநரிடம் அறிய முயற்சிக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கமான குற்றவாளியா என்பதையும் நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம். அவர் குடிபோதையில் இருந்துள்ளார்” என்றார்.


குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம் என்று இந்த வழக்கின் தனிப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பரபரப்பான சாலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண