Crime : குஜராத் மாநிலத்தில் லிவ் இன் பார்ட்னரை கழுத்தை நெரித்து காதலன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத்தில் பயங்கரம்


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்று அடுத்தடுத்து பல்வேறு சம்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது குஜராத் மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.


குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் பிலிமோரா என்ற பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். சுமார் ஒரு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இருவரும் ஒரு வீட்டில் லின் இன் முறையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. ஒரு சில நேரத்தில் அந்த இளைஞர், சிறுமியை அடித்துள்ளதாகவும் தெரிகிறது. 


கழுத்தை நெரித்து கொலை


அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் அந்த இளைஞர் குடிபழக்கத்திற்கு அடியானதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு, அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி துடிதுடித்து சில நேரங்களில் கத்தியுள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இப்படி இருக்கும் நிலையில், ஒருநாள் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அந்த இளைஞர் மீண்டும் சிறுமியிடம்  சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை கோபத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், அந்த இளைஞரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


உடனே இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)