பிகாரை சேர்ந்த 22 வயது இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


கொலை :


வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 22 வயது இளைஞரை மர்ம கும்பல் சில நாட்களுக்கு முன்னதாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த நபர் , பீகாரில் உள்ள பூர்ணியா பகுதியைச் சேர்ந்த அனவருல் ஹக் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர் . அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 




குற்றவாளிகள் :


கொலை செய்யப்பட்ட ஹக் வசித்த பகுதியை சேர்ந்த அதின் (26) மற்றும் ஜெய்த்பூரைச் சேர்ந்த அஹ்சன் (22) என்ற இருவர்   முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.  அதினிடம் இருந்து கசாப்பு கடையில் பயன்படுத்தும் கத்தி கைப்பற்றப்பட்டது . சிசிடிவி காட்சியில் கொலை செய்தவர்களுள் அதின் மற்றும் அஹ்சனும் கூட்டு.  இருவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவத்திற்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர்  அபு உஸ்மான் என தெரிய வந்துள்ளது. அதாவது உயிரிழந்த ஹக் திருமணமான பிறகும் பெண்ணுடன் உறவில் இருந்திருக்கிறார். அந்த பெண்ணின் நண்பர்தான் அபு உஸ்மான். இவர் உனக்கு திருமணமாகிவிட்டது. மீண்டும் இந்த உறவை தொடர்வது சரியல்ல என ஹக்கிடம் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும்  தனது தோழியை ஹக் தொந்தரவு செய்ததால் மீண்டும் அவரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றவே கையில் வைத்திருந்த கத்தியால் ஹக்கினை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியிருக்கின்றனர். உயிரிழந்த அனவருல் ஹக் வசித்த பகுதியில் மேலும் மூவருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஹக்கின் தூரத்து உறவுக்காரர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அனவருல் ஹக் பள்ளிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஹக் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண